பிறப்பு சான்றிதழில் ஏற்படுத்தப்படவுள்ள மாற்றம்

திட்டமிடப்பட்டுள்ள பிறப்பு சான்றிதழில் ஏற்படுத்தப்படவுள்ள மாற்றமும் மலையக தமிழர்களின் வாழ்வியல் உரிமையும்..(சுருக்கம்) அடுத்து வரும் நாட்களில் பிறப்பு சான்றிதழ் ‘தேசிய பாதுகாப்பு பிறப்பு சான்றிதழ்’ என்ற பெயரில் அடையாளப்படுத்தப்படவுள்ளதுடன் ‘மதம்’ தொடர்பான தகவல் உள்ளடக்கப்படாது என்னதுடன் ‘இனம்’ என்ற பகுதியும் நீக்கப்படுவதுடன் நாட்டில் பிறக்கும் அனைவரது பிறப்பு சான்றிதழிலும் “இலங்கையர்” என்ற பொது அடையாளம் இடம்பெறும் என பதிவாளர் நாயகம் அறிக்கைவிடுத்துள்ளார்.இத்தகவலானது கடந்தகாலக்கட்டத்தில் அடையாள அட்டைகளில் இனம் தொடர்பில் குறிப்பிடுகின்றமையால் கடந்த 3 தசாப்த காலமாக யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட நமது சகோதர இனத்தவர்களான தமிழர்களுக்கும் அண்மையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பாதிப்பினை உணர்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இந்த அறிவிப்பு ஒரு வித நிம்மதியினை கொடுத்திருக்கும் என நம்புகிறேன்.அதே போல் குறிப்பாக இவ் அறிவிப்பானது மலையக சமுகத்தினர் நீண்டகாலம் எதிர்பார்த்திருந்த மாற்றம் எனலாம். காரணம் இதுவரை காலமும் ‘மலையக தமிழர்களாகிய’ நாம் தொடர்ந்தும் ‘இந்திய வ...