வன்முறைக்கு எதிராக குரல் கொடுப்போம்

 

வன்முறைக்கு எதிராக குரல் கொடுப்போம்

 

வன்முறை என்ற நஞ்சை முறியடிக்கும் மருந்து நம்பிக்கையே

நவீன நாகரிகம் என போற்றப்படும் இன்றைய காலக்கட்டத்திலும் அரசியல், பொருளாதார, சாதி, மத பண்பாட்டுத்தளங்களில் சமூக ஒடுக்க முறைகளையும் ஆணாதிக்க வன்முறைகளையும் எதிர் கொண்டு வருவது தொடர்கதையாகி வருகிறது. அன்றாடம் குடும்பத்திலும், பொது இடங்களிலும் எதிர்கொள்ளும் வன்முறைகள் கேள்விக்கிடமாக இருக்கின்ற நிலையில் அதனை  எதிர்கொள்ள சமூக உணர்வாளர்களும் ஆர்ப்பாட்டக்காரர்களும் போராட்டக்களத்தில் இறங்கி எதிர்ப்பை தெரிவிக்கின்றனர்.

 


வரையறையற்ற வரைவிலக்கணங்களை உடையதும் பல வடிவங்களினால் உருவாககப்பட்ட வன்முறையையும் அதன் பால் பிரயோகிக்கப்படுகின்ற துஷ்பிரயோகமும் ஏற்றுக்கொள்ள முடியாதவையே. இவ்வாறான வன்முறைகளில் இல்ல வன்முறை, அரச வன்முறை, வன்புணர்ச்சி, பாலியல் தொல்லை மற்றும் பல வடிவங்களில் நேரிடலாம். இது எப்போதும் உடல் ரீதியாக இருக்க வேண்டும் என்றில்லை. எனினும் வேறு வகையிலான துஷ்பிரயோகங்களைப் போன்று அதேயளவு கெடுதி விளைவிக்கக்கூடியதாக இருக்கலாம்.



இத்தகைய வன்முறைகளை எதிர் கொள்ளுபவர்கள் இன்றைய சூழமைவில் சமாதானத்தின் செயற்றிறன் கொண்ட முகவர்களாகவோ அதன் அடிநிலையிலிருந்து செயட்படுபவராகவோ, குடியுரிமைச் சமூக சேவையில் உழைப்பபவர்களாகவோ, கொள்கை ஆலோசகர்களாகவோ , சிந்தனையாளர்களாகவோ, ஆய்வாலர்களாகவோ சிறு வருமனத்திற்கு தனியாக உழைப்பபவர்களாகவோ பல்வேறு பாத்திரங்களின் அடிப்படையில் பொறுப்புக்களை ஏற்று நடப்பவர்களாகவோ இருக்கலாம். இவர்களுக்கு இழைக்கப்படுகின்ற வன்முறைகளை பின்வரும் வகையில் நோக்கலாம்.

 

அரசின் வன்முறைகளைப் பற்றி நோக்குகையில் ஆயுதப்படைகள் அல்லது காவல் துறை வழியே நாம் காணும் வன்முறைகள் யாவும் அரசின் வன்முறையே, தன்னளவிலேயே வன்முறைப் பண்பைக் கொண்டதான  அரசு எனும் அமைப்பானது சமத்துவமும் அதிகாரத்தில் மக்கள் பிரதிநிதித்துவமும் ஜனநாயக விழுமியங்களும் குறைந்த சமூகங்களில் தன்னுடைய  அரசாங்கம் வழியே அந்த வன்முறையை நாட்டு  மக்களின் மீது வெளிப்படுத்துவதற்கான முக்கியமான காரணம் ஒரு அரசின் கருத்தியல் சாய்வுகளைக் காவல் துறை  பிரதிபலிக்கிறது. ஆகவே தான் அரசின் எல்லா அங்கங்களுக்கும் முக்கியமாக காவல் துறை அத்தியவசியமாகிறது.

 

காலனியக் காலக்கட்டத்தில் ஏகாதிபத்திய அமைப்பானது சுதந்திரத்திற்குப் பிறகு அரசின் அடக்குமுறையையும் வன்முறையையும் குழைத்து அடிமை விழுமியங்களால் கட்டப்பட்ட அரசாங்க அமைப்பானது சுதந்திரத்திற்குப் பிறகு முற்றிலுமாக கலைத்துப்போடப்பட்டு, தாராள மதிப்பீடுகளால் மருவுருவாக்கத்திற்கு உள்வாங்கப்பட்டிருக்க வேண்டும், அதிகார வேட்கையோடு ஆட்சியில் அமர்ந்த நம்முடைய அரசியலர்களுக்கும் வசதியான வகையில் அமைப்பை மாற்றி சர்வதிகார நாற்காலியில் அமர்ந்து சாதாரண மக்களை அடிமைகளாக்குகின்றனர். சமத்துவமற்ற ஒரு சமூகத்தில் நிர்வாக ரீதியில் ஏற்படும் பிளவுப்பாடுகள் வன்முறைகளைத் தூண்ட சாதுர்யமான ஏற்புகளாக மாறுகின்றன. கேள்வி என்னவென்றால், ஒரு நாடு குடியரசாகி பல ஆண்டுகளுக்குப் பிறகும் சாதி, மத, இனப் பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்ட குடிமையுணர்வை சட்டத்தைப் பாதுகாக்கும் சீருடைப் பணியாளர்கள் மத்தியிலேயே கொண்டுவர முடியவில்லை என்றால் அந்த அமைப்பின் நோக்கம் எப்பாற்பட்டது?

 

ஒரு சமூகம் குடிமையுணர்வையும், அரசின் அங்கங்கள் தொழில் முறைக் கலாசாரத்தையும்  வரித்துக்கொள்ளும் போது மக்களுக்கு நெருக்கமானதாகவும் வன்முறைகள் குறைந்ததாகவும் அந்த சமூகத்தின் அரசும், அதன் அங்கங்களும் மாறுகின்றன. எப்போதெல்லாம் அரசியல் தலைமை மோசமாகின்றதோ அப்போதெல்லாம் வன்முறை தலைத்தோங்கும்.

சமூகத்திலும் அரசியலிலும் பீறிட்டெழும் புதிய பிரச்சினைகளை, மாற்றுச் சிந்தனைகளை, எதிர் கருத்துக்களை எதிர் கொள்ளும் திராணி இல்லாத போது அவற்றை வெற்றி கொள்ள இயலாது. சமூகம் ஜனநாயகமாக மாறுவதற்கும் அரசு ஜனநாயகமாக மாறுவதற்கும் தொடர்பு இருக்கின்றது. நம் சமூகம் ஒடுக்கு முறையிலிருந்து வேறுபட்டதல்ல. அடக்குமுறைகளை எதிர்க்க போராட்டங்களாக வெடிக்கும் மக்களை வன்முறை என்ற போர்வைக்குள் அடக்கியாளும் தன்மையை மாற்ற தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.

 

அதனைத் தொடர்ந்து இல்ல வன்முறை பற்றி நோக்குகையில் இல்ல வன்முறை என்பது ஒரு குடும்பத்தின் அங்கத்தவர், வேறொரு குடும்பத்தின்  அல்லது அதே குடும்பத்தின் உறுப்பினரொருவரை உடலியல், பாலியல் மனவெழுச்சி, உளவியல், சமூகவியல் மற்றும் பொருளாதாரவியல் ரீதியில் கட்டுப்படுத்தல், ஆக்கிரமித்தல் செய்தலைக் குறிக்கும். இத்தகைய வன்முறை பிரதானமாக ஆண்கள் தமது அதிகாரத்தைப் பிரயோகிக்கும் பொருட்டு பெண்களுக்கு, குழந்தைகளுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கையாகும். உறுப்பினர்களுக்கு இடையே ஏற்படுகின்ற கருத்து வேறுபாடு வன்முறையாக மாறி உருவெடுக்கின்றன. இத்தகைய உடலியல்  துஷ்பிரயோகம் அல்லது மனவெழுச்சி சார்ந்த வன்முறைச் செயலைத்  தடுக்கும் வகையில் 2005ம் ஆண்டு 34 ம் இலக்க இல்ல வன்முறைச் செயல் தடுப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

தேசியத்தை, வகுப்பை, சாதியை, இனத்தைக் கருத்திற் கொள்ளாது குடும்பங்களில் சம்பவிகின்ற  வன்முறையானது பாதிக்கப்பட்டவரிடமிருந்து சுய கௌரவத்தை முற்றாக இல்லாமற் செய்வதுடன் உயிருக்கு அச்சுறுத்தலை எட்படுத்தக்கூடியதாகவே அமைகின்றது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் தனிப்பட்ட ஒருவரின் உடல் மீதான உரிமை மீறலைக் கட்டுப்படுதுவதற்க்கு மேற்குறிப்பிட்ட சட்ட அமுலாக்கம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

 

பெண்கள் ரீதியான பாலியல் வன்முறைப் பற்றி நோக்குகையில் பாலியல் வன்புணர்வு, பாலியல் நோக்குடன் அடிமைப்படுத்தல், கட்டாய பாலியல் தொழில், வலிந்து கர்ப்பமாக்குதல், கட்டாய இன விருத்தியை மேற்கொள்ளல், பாலியல் சார்ந்த கேலி, மிரட்டல், கட்டாய கருக்கலைப்பு என பல வகை வன்முறைகளை குற்றங்களாகக் கருதலாம். காலங்கள் மாறினாலும் தொழிநுட்பங்களைத்   தாண்டி சாதனைகளை நிகழ்த்தினாலும் தொன்று தொட்டு வந்த கலாசாரம் புது முகங்களை அங்கீகரித்துக் கொன்டாலும் மனித மனப்பாங்கும் அவனது நடத்தையும் சீராகாத வரை உள்ளங்கள் பண்படாத வரை மனிதம் தொலைத்து மனிதன் தேடி திரியும் நல்வாழ்வு கிடைப்பது ஐயம் என்பதை இன்றைய உலகினை யுத்தமாக, பாலியல் வன்கொடுமையாக ஆட்சி செய்யும் வன்முறை எனும் எஜமான் தெளிவாக உணர்த்தி வருகிறது.

 


வன்முறை வன்முறையையே தூண்டும் என்ற வகையில் இவ் வலைப்பின்னலிலிருந்து கருவழிக்கப்பட வேண்டிய மாபெரும் சமூக பிரச்சினையாக மனித உரிமை மீறலின் இன்னுமொரு அத்தியாயமாக பாலியல் ரீதியான வன்முறை அடையாளங்காணப்படுகின்றது.

 

2013ம் ஆண்டின் உலக சுகாதார தாபனத்தின் பல்நாட்டு கணிப்பின் படி மூன்று பெண்களில் ஒரு பெண் தன் வாழ் நாளில் பாலியல் வன்முறைக்கு உள்ளாகின்றனர். இத்தாபனத்தின் தரவுகளுக்கமைய உலகிலேயே பாலியல் வன்முறைகள் அதிகமாக இடம்பெறும் வலயமாக தென்கிழக்காசிய நாடுகள் இனங்காணப்பட்டுள்ளன. இவ்வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுக்க மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சு, அரச , அரச சார்பற்ற தாபனங்கள், சிவில் அமைப்புகள் முன்வருவதுடன் சட்டங்களும் கொள்கைகளும் மறுசீரமைக்கப்பட வேண்டும். அதனுடன் சமூக விழிப்புணர்வை  சமூகத்தில் பரவலடையச் செய்ய செயலமர்வுகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

 

இல்லறம் காக்கவே பெண் என்பது முதலாளித்துவச் சுரண்டலின் தந்திரம் என்பதை பெண்கள் உணர்ந்து ஆணுக்கு உரைக்கும் படி ஆர்த்தெழுந்து போராட வேண்டும். வரதட்சணை, சிசுக்கொலைகள்  , குழந்தை  திருமணங்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை வேண்டும் என்ற மனோபாவத்தை உடைத்தெறிய அனைவரும் ஒன்று பட வேண்டும். பெண்ணை இரண்டாம் பாலினமாக ஒதுக்கி வைக்கும் இழி நிலையை மாற்றியமைக்க போராட வேண்டும். ஆணுக்கு பெண் நிகர் என்பதை புத்தியில் உணர்த்த வேண்டும்.

நிலவுடைமைச் சமூகத்தில் அடிமைகளாக இருந்து முதலாத்துவ முதலைகளின் வன்முறைகளிலிருந்து  எம்மவர்களைப் பாதுகாக்க ஆயுதமேந்துவது ஆபத்தானவையல்ல. உழைப்பால், திறமையால் சமூகத்தில் முன்வருபவர்களை வன்முறை என்ற ஆயுதத்தால் அடக்குவதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் புறச்சூழலை மீறி வெளியில் வருவதற்கு மனதில் உறுதி கொள்ள வேண்டும். வன்முறைத் தடுப்புச் சட்டங்களை நடைமுறைப்படுத்த அரசு முன்வர வேண்டும்.


மேற்குறிப்பிடவாறு நாம் நம்பிக்கையுடன் மேல் தட்டு வர்க்கத்தினரின் அடக்குமுறைகளை எதிர்தோமேயானால் வன்முறையை இல்லதொழிக்கலாம் .

 

Comments

Legal Draftmen's Department of Sri Lanka

Dissolution of the Provincial Council by the Governor- Writ of Certiorari and Prohibition

Sri Lankan Legal System

Water pollution (Environmental law )