பிறப்பு சான்றிதழில் ஏற்படுத்தப்படவுள்ள மாற்றம்
திட்டமிடப்பட்டுள்ள பிறப்பு சான்றிதழில் ஏற்படுத்தப்படவுள்ள மாற்றமும் மலையக
தமிழர்களின் வாழ்வியல் உரிமையும்..(சுருக்கம்)
அடுத்து வரும் நாட்களில் பிறப்பு சான்றிதழ் ‘தேசிய பாதுகாப்பு பிறப்பு சான்றிதழ்’ என்ற பெயரில்
அடையாளப்படுத்தப்படவுள்ளதுடன் ‘மதம்’ தொடர்பான தகவல் உள்ளடக்கப்படாது என்னதுடன்
‘இனம்’ என்ற பகுதியும் நீக்கப்படுவதுடன் நாட்டில் பிறக்கும் அனைவரது பிறப்பு
சான்றிதழிலும் “இலங்கையர்” என்ற பொது அடையாளம் இடம்பெறும் என பதிவாளர் நாயகம்
அறிக்கைவிடுத்துள்ளார்.இத்தகவலானது கடந்தகாலக்கட்டத்தில் அடையாள அட்டைகளில் இனம்
தொடர்பில் குறிப்பிடுகின்றமையால் கடந்த 3 தசாப்த காலமாக யுத்தத்தின் போது
பாதிக்கப்பட்ட நமது சகோதர இனத்தவர்களான தமிழர்களுக்கும் அண்மையில் இடம்பெற்ற
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பாதிப்பினை உணர்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்
மக்களுக்கும் இந்த அறிவிப்பு ஒரு வித நிம்மதியினை கொடுத்திருக்கும் என
நம்புகிறேன்.அதே போல் குறிப்பாக இவ் அறிவிப்பானது மலையக சமுகத்தினர் நீண்டகாலம்
எதிர்பார்த்திருந்த மாற்றம் எனலாம். காரணம் இதுவரை காலமும் ‘மலையக தமிழர்களாகிய’
நாம் தொடர்ந்தும் ‘இந்திய வம்சாவளியினர்’ என அடையாளப்படுத்தப்பட்டிருந்தமையால் எமது
“வாழ்வியல் உரிமைகளை” பறிக்கொடுத்து இலங்கையில் 2ம் தர பிரஜைகளாக
நோக்கப்பட்டிருந்தோம்.(உம் : பிரஜா உரிமை வழங்கப்பட்ட நிகழ்வு)அவ்வாறு அல்ல.
ஆங்கிலேயர்களின் குடியேற்றத்தின் பின்னராக சுமார் 200 வருட காலம் (இங்கேயே பிறந்து
வளர்ந்து எமக்கே உரித்தான சமுக, பொருளாதார, அரசியல் மற்றும் கல்வி, கலாசார மொழி
ரீதியான தனித்துவத்துடன்)எமது மலையக பிரதேசத்தையும் இலங்கையையும் தாயகமாக கொண்டு
வாழ்கின்றோம். அவ்வாறிருக்க, பொதுவில் வம்சாவளியினர் என்பது தனது சொந்த தேசத்தை
விட்டு வேறு தேசத்தில் வாழ்பவர்கள் என்பதுடன் வெறுமனே வியாபார நோக்கங்களுக்காக
தங்குபவர்களாகும். இந்திய வம்சாவளிகள் இந்தியாவில் உள்ள பரம்பரை சொத்துக்களை
கட்டிகாப்பதுடன் பணத்தை சம்பாரிப்பதும் அதனூடாக தங்களது சமுக அங்கிகாரத்தை
உருவாக்கிகொள்பவர்களை குறிக்கும். இவர்களிள் சிந்தனையும் தாய் தேசமும்
இந்தியாவாகும். எனவே இலங்கையின் மலையக தமிழர்களுக்கும்
இந்தியவம்சாவளியினருக்குமிடையில் நிறைய தாற்பரிய வேறுபாடுகள் உள்ளது.இலங்கையில்
மலையக தமிழர்களாகிய எம்மீது தொடர்ந்தும் 200 வருடகாலம் “இந்தியவம்சாவளி தமிழர்கள்”
எனும் அடையாளம் திணிக்கட்பட்டு வந்துள்ளது. எனவே அதனை மாற்றியமைக்கும்
அடித்தளமாகவும் இலங்கையில் இனநல்லினக்கத்தை ஏற்படுத்தும் மூலமொன்றாகவும் பதிவாளரின்
அறிக்கை அமைந்திருக்கிறது.மேலும் இது இலங்கை அரசியலமைப்பில் சிறுபான்மையினருக்கு
வழங்கப்பட்டுள்ள உரிமைகளை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது. இவ்வாறு பதிவாளரின்
அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் வெறுமனே ஒப்பனை மாற்றமாக அன்றி தேர்தலின்
பின்னரான காலத்தில் அர்த்த பூர்வமான மாற்றமாக அமையுமாக இருப்பின் உண்மையில்
வரவேற்க்கதக்கது எனலாம்..
Comments
Post a Comment