இணைய வழி கல்வியின் தாக்கம்
- Get link
- X
- Other Apps
இந்த கட்டுரையானது இன்றைய காலத்திற்கு தேவையானது என நம்புகின்றோம். காரணம் கொரோனாவால் கல்வி முறை இணையமயமாகி விட்டது. அந்த இணைய வழி கல்வியின் ஒரு பாதக விளைவை பற்றியே இந்த கட்டுரை அமைந்துள்ளது. இன்றைய காலத்தில் இணைய பாவணை என்பது சாதாரணமாகிவிட்டது. அதனால் அனைத்து நடவடிக்கைகளும் கையடக்க தொலைபேசியின் ஊடாக இணையத்தை பயன்படுத்தி செய்ய கூடியதாக காணப்படுகின்றது. அதற்காக அதிவேக இன்டர்நெட் வசதியும் வந்துவிட்டது படிக்கும் நோக்கம் என கருதும் பெற்றோர்கள் எந்த தயக்கமும் இல்லாமல் இன்டநெட் வசதியை ஏற்படுத்தி கொடுக்கின்றனர். அதை கல்வி நோக்கத்திற்காக மட்டும் எத்தனை மாணவர்கள் பயன்படுத்துகின்றனர்? என்பது கேள்விகுறியாகும் எனவே இந்த கட்டுரையின் நோக்கம் இன்றைய மாணவர்கள் கல்வியை தாண்டி ஆபாசபடங்களுக்கு அடிமையாகும் முறையும்
அதற்கான சட்டங்களும்,
அதை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் என மூன்று விடயத்தை உள்ளடக்கி உள்ளது.
கலாசாரத்தில் ஆணி வேரில் அமிலத்தின் ஊற்றுவதாக இன்றைய காலத்தில் கையடக்க தொலைபேசிகள் மாறிவிட்டது அதாவது ஆரம்பகாலத்தில் விளையாட்டாக வீடியோ கேம்களை மட்டும் ரசித்த பள்ளி மாணவர்கள் இன்று ஆபாச வலைதளங்களை அடிக்கடி நலம் விசாரிக்கின்றனர் சர்வதேச அளவில் மென்பொருள் உருவாக்கத்தில் சாதனை படைக்கும் ஒரு பிரிவினரும் மறுபுறம் போதைபொருள் போல ஆபாச படங்களுக்கு அடிமையாகும் இன்னொரு பிரிவினரும் உருவாகின்றனர்
முன்பு காட்சிகள் எழுத்து, போட்டோ வடிவில் மட்டுமே பார்க்க முடிந்த ஆபாசமான விடயங்கள் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக நேரிடையாக பார்க்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. ஊடகங்களால் ஆபாச காட்சிகள் சாதாரணமாகி விட்டன; இது தவறானது, கூடாது என்ற மனநிலை மாறிவிட்டது. படிக்கும் வயதிலேயே ஆண் - பெண் உறவு எல்லை தாண்டி, கலாசார சீர்கேடு தலைதூக்குகிறது. கிரைம் சம்பவங்களுக்கும் வழிவகுக்கிறது. தொழில்நுட்பம் என்பது கத்தி போன்றது. ஆபரேஷனுக்கும் உதவும்; உயிரை கொல்லவும் உதவும். ஆபாச படங்களுக்கு அடிமையான பலரும், பிரச்சனை நம்மை கை மீறி போய்விட்டது ஆபத்தான நிலையில் உள்ளோம் என்பதை புரிந்து கொள்வதில்லை. ஒரு சிலர் மட்டுமே பிரச்னையை கூறி தீர்வு காண முன்வருகின்றனர்
இலங்கையில் ஆபாச படங்கள் தொடர்பான இரு சட்டங்களில் ஏற்பாடுகள் காணப்படுகின்றன அவையாவன தண்டனை சட்டக்கோவை மற்றொன்று ஆபாச படங்கள் கட்டளைச்சட்டம் தண்டனை சட்டக் கோவையின் பிரிவு 285 மற்றும் 286 ஒன்றாக வாசிக்க படுதல் வேண்டும். இப்பிரிவுகளில் எவராவது ஆபாசமான புத்தகங்களை ,கையேடுகளை பத்திரிகைகளை, வரைகளை வர்ணம் தீட்டி புகைப்படங்களை வெளியீடுகளை, அல்லது இலக்கங்களை விசாரித்தால் குற்றமாகும் அத்துடன் மேற்குறிப்பிடப்பட்டவற்றை மீட்பதற்காக அல்லது வாடகைக்கு விடுவதற்காக இறக்குமதி செய்தால் அல்லது அச்சிட்டால் குற்றமாகும் அத்துடன் பொதுமக்கள் பார்வைக்கு வேண்டுமென்றே காட்சிக்கு வைத்தல் குற்றமாகும். முக்கியமாக விற்றல் விநியோகித்தல் மற்றும் பொதுமக்கள் கண்காட்சி போன்ற நோக்கத்திற்கு உடைமையில் வைத்திருந்தால் குற்றமாகும். எனவே ஒருவர் தனது சொந்த அல்லது வேறு உபயோகத்திற்காக ஆபாச படங்களை இறக்குமதி செய்தோ அல்லது உடைமையில் வைத்திருப்பதும் குற்றமில்லை அதனை மற்றவருக்கு கொடுத்தால் அவர் குற்றம் புரிந்தவர் ஆகின்றார்
குற்றவியல் கோவை 1995 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதன் விளைவாக 286 ஆ எனும் புதிய உட்பிரிவு பொருத்தப்பட்டது இது சிறுவர் உரிமை தொடர்பான ஒரு பிரிவாகும் இதில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் சிறுவர்களை ஆபாசப் படங்களில் தோன்றுவதற்கு தொழிலில் அமர்த்துவதற்கு உபயோகித்தல் தூண்டுதல் குற்றமாகும் இங்கு ஆபாச படங்கள் என்பது ஆபாசமான அல்லது ஒழுக்கக்கேடான கண்காட்சி, காட்சி, புகைப்படம் ,திரைப்படம் அல்லது ஏதாவது உள்ளடக்கும் மேலும் அத்தகைய படங்களை விற்றல் விநியோகித்தல் மற்றும் உடைமையில் வைத்திருத்தல் குற்றமாகும்
பிரிவு 286அ 1998 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் திருத்தப்பட்டதை தொடர்ந்து புகைப்படம் அல்லது திரைப்படத்தில் ஒருவர் தனது தொழில் செயற்பாட்டின்போது ஆபாச படங்களை கண்டால் போலீசாருக்கு அறிவித்தல் வேண்டும் அவ்வாறு செய்யத் தவறுவது குற்றமாகும் இறுதியாக தண்டனை சட்டக் கோவையின் ஆபாசம் தொடர்பில் பிரிவு 287 எவராவது பொது இடத்தில் அல்லது அதற்கு அருகாமையில் மற்றவர்களை தொந்தரவு செய்யும் விதமாக ஆபாசமான பாடல்களை கவிதைகளை அல்லது சொற்களை பாடுவது அல்லது கூறுவது குற்றமாகும்.
இறுதியாக ஆபாச வெளியீடுகள் கட்டளை சட்டத்தின் பிரிவு 2 பின்வருமாறு ஏற்பாடு செய்கின்றது ஏதாவது ஆபாசமான விடயத்தினை உள்ளடக்கிய ஒன்று விற்பதற்கு விநியோகம் செய்வதற்கு பொது கண்காட்சிக்கு ஏற்றுமதி இறக்குமதிக்கு விளம்பரம் செய்வதற்கு உற்பத்தி செய்தல் உடைமையில் வைத்திருந்தால் குற்றமாகும். இச்சட்டத்தில் கூட சொந்த உபயோகத்திற்காக அல்லது வேறு தடை செய்யப்படாத நோக்கத்திற்காக உடைமையில் வைத்திருந்தல் குற்றமாக கூறப்படவில்லை
சிறுவர் உரிமை பற்றிய சமவாயத்தினண நோக்குவோமாயின் அதன் உறுப்புரை 17 சிறுவர்களின் தகவல் பெறும் சுதந்திரத்தினை அங்கீகரிக்கின்றது அதாவது சிறுவரின் சமூக ஒழுக்க மேம்பாட்டிற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் சிறப்பாக பயன்படுத்தப்படக் கூடிய தகவல்களை பெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என தேவைப்படுகின்றது உறுப்புரை 17 சிறுவர்களுக்கு ஊறு விளைவிக்கக் கூடிய தகவல்கள் மற்றும் தகவல் சாதனங்கள் என்பனவற்றிலிருந்து சிறுவர்களின் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்கின்றது.
ஒழுக்கம் என்பது சமூகத்திற்கு சமூகம் வேறு படுகின்ற ஒன்றாக காணப்படுகின்றது என்றாலும் அடிப்படை ஒழுக்க கோட்பாடு மாறுபடக் கூடிய ஒன்று அல்ல உதாரணமாக சம்மதம் பெறப்படாத அல்லது விருப்பிற்கு மாறான பாலியல் உறவு உலகில் எந்த சமூகத்தினால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை
இன்றைய இன்டர்நெட் வசதிகளில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் என்று பார்க்கின்ற பொழுது இன்டர்நெட் சேவை நிலையங்கள் அதி வேகமாகமாக உருவாகி வருகின்றன இத்தகைய நிலையங்களில் சிறுவர்கள் அதாவது ( 18 வயதிற்கு உட்பட்டவர்கள்) எவ்வித கட்டுப்பாடும் இன்றி வலைத்தளத்தில் உள்ள ஆபாச படங்களை அணுகக் கூடியதாக உள்ளது இத்தகைய முறைகளில் இருந்து சிறுவர்கள் பாதுகாக்கப்படுதல் வேண்டும் இன்றநெட் நிலையத்திற்கு சிறுவர்கள் செல்லும் போது வேறொருவரின் மேற்பார்வையில் செயற்படும் வகையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.க இன்று கடன் முறைகளிலும் அல்லது இலவசமான முறைகளிலும் லேப்டாப்புகள் வழங்குகின்ற சந்தர்ப்பத்தில் தேவையற்ற வலைதளங்களிலும் நுழையாதவாறு இணைப்பினை துண்டிக்க வேண்டும் சர்வதேச ரீதியாக அத்தகைய வலைதளங்களை அடையாளம் கண்டு அவற்றை அழித்து விடுதல் அல்லது இலங்கையிலிருந்து அவற்றை அணுக முடியாத முறையிலான தடை செய்தல் வேண்டும் புதிதாக இலங்கையில் அவ்வாறான வலைதளங்களை உருவாக்குபவர்களுக்கு எதிராக சட்ட ஏற்பாடுகளை உருவாக்குதல் வேண்டும் . ஆபாச படங்கள் மெமரி கார்டுகளில் பதிவிறக்கம் செய்வதை சட்டத்தினால் தடுக்க வேண்டும் அத்துமீறினால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் இதனையும் விட முக்கியமான வகி பங்கு என்பது பெற்றோர்களுக்கு காணப்படுகின்றது வளரும் குழந்தைகள் மாணவர்கள் கைகளில் போன்களையும் அதிக நேரம் கொடுக்க வேண்டாம் அவர்கள் அதனை பயன்படுத்துகின்ற சந்தர்ப்பத்தில் எந்த நோக்கத்திற்காக பயன்படுத்துகின்றார்கள் அதில் என்ன செய்கின்றார்கள் என்பதனை உற்று நோக்குதல் வேண்டும். ஒருமுறை அவற்றில் சிக்கிகொண்டால் வெளிவருவது கடினம். மாணவர்களின் கல்வி மட்டுமல்ல முழு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுவிடும் இன்றைய தொழில்நுட்ப உலகில் பிள்ளைகளை சரியான வழியில் கொண்டுசெல்ல பெற்றோர்களின் கண்காணிப்பு என்பது இன்றியமையாத்து இன்றைய மாணவ சமூகமும் ஆபாசபடங்களை பார்ப்பது குற்றம் பாவம் என்பதை உண்ர வேண்டும்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment